அவளின் ஓர பார்வையில் நான் !.....

உண்மையான் காதல் வரிகள் !..
என்னவள் எனக்காக
அங்கே
அவள் பிறந்துயிருக்க!
அவளுக்காக
நான்
இங்கே பிறந்துயிருந்தேன்
சிறுபிள்ளையாய்
அவள் இருக்கும்போது
அவளை அழைத்துக்கொண்டு
அவள் பெற்றோர்
எங்கள் இல்லம் வர
அவள் என்னவள்
என்று தெரியாமல்
அவளோடு
ஓடிப்பிடித்து
விளையாண்டேன்
அன்று!
காலங்கள் கடக்க
கடகடவென
வளர்ந்து வந்தால்
வயதிற்கு
அவள் வளர்ந்த
பருவம் தெரியாமல்
எங்கள் சொந்தங்களின்
சொந்தங்கள் தேவைக்காக
சொந்தம் தேடி
தொலைதூரம் சென்று
அவள் இல்லம்
சென்று
அவளோடு பேசி
அவள் இல்லத்தோடு பேசி
வண்ண புகைப்படம்
எடுக்கும் இயந்திரத்தில்
வகைவகையாக அவளையும்
என்னோடு அவளையும்
வைத்து பல வண்ண
புகைப்படம் எடுத்து
வந்தேன்
எனது இல்லம்
இல்லம் வந்த
என் இதயத்தில்
அவள் குடிக்கொள்ள
அவள் இதயத்தில்
நான் குடிகொள்ள
இருவரும்
ஒருவருக்கு ஒருவர்
சொல்லாமல்
ஒவ்வரு வருடங்களாக
சில வருடங்கள் கரைந்தன !
அவளை பெண்
பார்க்க வேறொருவன் வர
அவனை மறுதலிக்க
மணமுடித்தால்
மச்சானைத்தான்
அவள் சொல்ல
அவளை மனமாற்றி
பேசிமுடித்து
சொல்லும் பொருட்டு
தூதுவனாய்
அவன் அண்ணன்
இங்கே வந்து
சொல்லும் கதையாய்
சொன்னான் அவன்
சொல்லும் கதை
கேட்டு
சோகமாய் நான் மாற
சோகம் முகம் கண்ட
என் பெற்றோர்
பெண் கேட்க
அங்கே சென்று
அவள் மனமறிந்து
மணமகளாய்
அவளை
மாலை நேரத்தில்
அழைத்துவர
மாலையில்
துயில் கொண்ட
நான்
எழுந்து
அவளை பார்க்க
அவளோ என்னை
நேரில் பார்க்க
இயலாமல்
வெட்கமாய்
வீட்டிற்குள் ஓடி
ஓரமாய் நின்று
ஓர கண்ணால்
ஒளிந்திலியிருந்து
அவள் என்னை
பார்க்க
அவள் இதயத்தில்
என்றென்றும் நான்
அவளோடு .
அவள் இதயத்தில் .
என்றும் அன்புடன்