பெண்

பெண் சாதிக்க பிறந்தவள்
இல்லை என்றாலும்
நேசிக்க பிறந்தவள் !
பிறந்த நொடியில் இருந்து
பெற்றோர்களை நேசித்து .....
வளந்த பிறகு
உடன் பிறப்புகளை நேசித்து....
வாழக்கையை வாழ கற்று கொண்டபொழுதில்
கல்வியையும்,நண்பர்களையும் நேசித்து....
திருமணம் முடிந்ததும்
கணவனையும்,புகுந்த வீட்டை நேசித்து...
அம்மா என்ற இடத்தை
அடைந்த பொழுதில்
பிள்ளைகளை நேசித்து....
முதுமையில்
உலகத்தையும்,தனிமையும் நேசித்து...

யார் சொன்னது ?
பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள்
இல்லையென்று
பெண்கள் நேசிக்க தெரிந்தவர்கள்
பெண்கள் நேசித்து வாழ்ந்தது
எல்லாம் சாதனை தான்
பெண்கள் வாழக்கையை
ஒரு சாதனை பயணம் ........
இதில் எங்கு சென்று தனியாக சாதிக்க இந்த உலகத்தில் ........

எழுதியவர் : திவ்யா (4-May-10, 2:54 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : pen
பார்வை : 1945

மேலே