இன்ப வாழ்க்கைக்கு,

அதிகாலை கண் விழித்து
அழகாக தனையாக்கி
ஆனந்தமாய் புத்தகத்தை
கற்பதுவே கடமையாய் எண்ணி
புத்திதனை கூர்மையாக்கி
எத்திசையும் புகழ்விளங்க
விழிப்போடு இருந்திடுவாய்,
உன் கண்விழி
பார்வைபட்டால் இவ்வுலகமே
சிறந்து விளங்க
எழுந்திடுவாய்,
வீறுகொண்டு நடந்திடுவாய்!
உன் பிறப்பினை எண்ணி
உலகமே வியக்கும் வண்ணம்
எறும்பைப்போல்
எந்நேரமும் உழைதிட்டால்
உனக்கு
ஊறுகள் கிடையாது!!!

உன் நெஞ்சினை மலையாக்கி
மெய்யினை இயற்கையாக்கி
வாழ்ந்திடுவாய் நீ எந்நாளும்
விவேகானந்தரின் வாக்குப்படி
எழுமின்!விழிமின்!!உழைமின்!!!

எழுதியவர் : KAVIYARASAN N (21-Aug-13, 5:21 pm)
சேர்த்தது : Kavi Arasan2
பார்வை : 81

மேலே