அவள் என் பொண்டாட்டி
அன்பே என்றேன்
தம்பி என்றாள்,
ஆருயிரே என்றேன்
மகனே என்றாள்,
காதலியே என்றேன்
உன் அப்பாவை கூப்பிடு என்றாள்,
அப்பா இங்கில்லை என்றேன்
மௌனித்தாள்.
காதிலே ஏதோ உணர்வு
கையினால் காதைத் தடவியவாறு
அவளை விழித்தேன்!
சட்டென்று திரும்பினேன்
யாரோ ஒருவர் என்னை பார்த்து
ஏதோ சொன்னார்,
ஒன்றும் புரியவில்லை
தலையை சரித்து மீண்டும் கேட்க
கூறினார்
யார் நீ என் பொண்டாட்டிக்கு
காதல் சொல்ல என்று
அப்போது புரிந்தது
தம்பி மகனே உன் அப்பாவை
கூப்பிடு என்றது
மூன்று வயது மகனிடம்
கூறியது தான் என்று
விரைந்தேன் வைத்தியசாலைக்கு
ஏனெனில் அவன் அடித்ததில்
என் ஒரு செவிப்பறை கிழிந்திருந்தது.