என்றுமே சங்கடத்தில்......
கட்டுபாடுகளற்று
கந்தர்வம் ஏற்கப்பட்டு
கணக்கில்லா கன்னியர்
கலங்கப்பட்டதால்......
சமூக ஒருங்கமைப்பிற்காய்
சகலரும் ஏற்ற
சாஸ்திர விவாஹம்
சம்மதமானது!
கட்டுப்பாட்டிற்காக
கண்ட ஒரு வழியே
கண்களை கட்டிவிட
கண்ணீர் கதைகள் மட்டுமே!
சட்டத்தை ஒழுகுவதும்
சம்பிர்தாயத்தை ஏற்பதுவும்
சாஸ்திரத்தை விவாதிப்பதும்
சம்மதமகலாம்.......
கன்னியரின் கலக்கங்கள் மட்டும்
சந்தர்ப்பங்களில் சாகாது
காலத்திற்கும்
சாஸ்வதமாய் ...