சில்லறை என்ன விலை

அன்று வருட விசேசம் என்றால்
ஒரு ரூபாய் கைவிசேசம்
இன்று அது ஒரு சம்பிரதாயம்
தாள் காசிற்கு துணைவியாம்
சதத்திற்கு கல்லறையும் கட்டி
சில்லறையால் மாலையும் இடுகிறார்கள்
ஏன் எனக் கேட்டதற்கு
சில்லறை ஒரு நாள் மல்லிகையாம்
நாளை பெறுமதி பூச்சியம்தானாம்
சந்தைக்கு சென்றால்
பல பேர் சில்லறை
கிலோ என்ன விலை என்கிறார்கள்
வேறு சிலர் கிலோ
காலண என்கிறார்கள்
நான் இரும்பு விலை
ஏதெனக் கேட்டதற்கு
காலண விலை சொல்கிறார்கள்
யாதெனக் கேட்டதற்கு - இது
இன்றைய செல்லாச் சில்லரையாம்
இன்று சந்தைக்கு
உரப்பைச் சில்லறையுடன்
வண்டிபிடித்து வருகிறார்கள்
விட்டிற்கு கைப்பையில்
பொருளுடன் செல்கிறார்கள்
ஏன் எனக்கேட்டால்
சில்லறைகள் எல்லாம்
இன்று உரப்பைக்கு சொந்தங்களாம்
சரி நீ என்ன சொல்கிறாய்
எனக் கேட்டதற்க்கு
ஐயையோ ஐயகோ
நான் வாழ் விருப்பவில்லை
பாவி இம் மனிதன் கையில்
கல்லறையே போதுமப்பா
வாழ்ந்திடுவேன் எனக் கூற
ஏன் எனக் கூறெனக்
கேட்டதற்க்கு
தன் ஆத்ம சாந்திக்காய் நல்லதுவாம்