அதிகாலையும் - அந்தி வானமும்

காகத்தின் கரையும் ஒலியுடன்
சேர்ந்து கூவியது ஒரு சிட்டுக் குருவி !
இரு காதல் பறவைகள் கானம் பாட
கத்தும் குயிலோசையின் குரல் சேர
அதிகாலைத் தென்றலின் வாசம் வீச
என் தோட்டத்துப் பூக்களின் நறுமணம் வீச
எங்கோ ஒரு கோழி கூவியது
விடிந்து விட்டது ; பகலவன் வந்து விட்டான்
உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கலென்று !

அந்தி வானத்தில் வெங்கதிரோன் சற்றே
தனது வெம்மையினைக் குறைத்துக் கொண்டு
வெண்ணிலவுக்கு வழி விடும் காட்சி
அந்திவானத்தில் மட்டுமே காணும் காட்சி !
கடலலைகள் சீற்றத்துடன் சீறிப் பாயத்
தொடங்கும் காட்சியை காண முழு மதி
புறப்பட்டு வந்து விட்டான் எனச் சொல்லும்
அந்திவானத்தில் விண்மீன்கள் கண்சிமிட்டி
அழைக்கும் காதலனாய் பால்வெளி எங்கும்
நிறைந்து நம்மை அழைத்து செல்கிறது !

அதிகாலையும் அந்திவானமும் சந்தித்துக்
கொண்ட காட்சி ஒருவர் மீது ஒருவர்
ஊடல் கொண்ட காதலர்கள் காவிரியின்
கரைதனில் அமர்ந்து கானல் வரிகள்
பாடிய காட்சியைக் கண் முன் நிறுத்தியது !
மங்கிய மாலைப் பொழுதினிலே மேகங்கள்
இசைபாட ஊடலுக்குப் பின் கூடலாய்
வானின்று மழை பொய்வித்தக் காட்சி
அதிகாலையும் அந்திமாலையும் ஆனந்தக்
கூத்தாடும் இயற்கையின் இறைமை அது !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Aug-13, 3:38 pm)
பார்வை : 77

மேலே