வேசங்கள்

கருவெனப் பெயர் கொண்டேன்
ஈரைந்து மாதங்கள் கருவறையில்
கவலையின்றி
துயில் கொண்டேன்.

அண்டம் கண்ட அடுத்த
வினாடி-சொல்லியழுதேன்
வேசங்கள் நிறைந்த இங்கு
வாழவன்சி விம்மியழுதேன்

பதின் பருவம்
பாடப் புத்தகம் சுமந்த
பந்தயக் குதிரையானேன்

அலங்கார கல்யாணச் சந்தையில்
அடுத்தபடியாய்
அற்புதமாய் விலைபோனேன்

பெரும் பாத்திரங்கள்
கனக்காமல் போய்விடவே
நல்லவன் வேசத்தில்
நாள்தோறும் தோற்றுப் போனேன்.

பல வேசம் தாங்கிவந்து
பதவியுயர்வுகள் நானடைந்தும்

காலம் எனையழைத்து
ஒப்பனைகள் பலவமைத்து
முதிர்வெனும் ஆடைக்குள்
மூச்சினை இறுக்கிடவே

போட்டுக் கொண்ட வேசங்கள்
பொருந்தாமல் போய்விடவே
வாழ்க்கைச் சாலையோரம்
வழிதவறிய
வழிப்போக்கனாய் நான்.

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (22-Aug-13, 3:45 pm)
பார்வை : 95

மேலே