அழுகையால் கிடைத்தது..!
பிறந்தபோது அழுதேன்..
அமுது கிடைத்தது..!
பள்ளி செல்ல அழுதேன்
படிப்பு கிடைத்தது..!
தேர்வு முடிவு அழுதேன்
தோல்வி கிடைத்தது..!
கல்லூரி வாசலில் அழுதேன்
நாணம் கிடைத்தது..!
அவனை கண்டு அழுதேன்
காதல் கிடைத்தது..!
இன்று கல்யாணம் அழுகிறேன்
மணமகன் வேறு கிடைத்தது..!.
நாளை நான் அழமாட்டேன்
என் வாழ்க்கை முடிந்தது ...!