பரிணாமங்கள் :

இதழோரத்தில் தோன்றும் புன்னகை..
விழியோரத்தில் நிற்கும் கண்ணீர்த்துளி ....
வெற்றியின் இரு வேறு பரிணாமங்கள்:



பல தியாகங்களையும் பல மேற்கோள்களையும்
தன்னகத்தே கொண்டு ......
பலவற்றை பாராமுகம் இல்லாமல் இழந்து ......
விதியோடு விளையாடி வெற்றி கொண்டு .....
சூழ்ச்சியில் விழாமல் விழித்திருந்து ..
விடியலுக்கே ஓர் பாடமாய்....
வீணான மனிதர்களின் வீம்பு பேச்சுக்கு ..
வார்த்தையில் பதில் கொடாமல்...
தன் வெற்றி வாழ்வையே பதிலாக கொடுத்து ...
தோல்வியை தன் தலைமை ஆசானாய் கொண்டு ...
தேவைப்படும் நேரத்தில் அவரிடம் (தலைமை ஆசான்)கல்வி பயின்று ...
வீசப்படும் ஏளன பேச்சுக்களை மனதில் மறுத்து ..
திசை காட்டும் கருவியாய்...
ஒளி காட்டும் கலங்கரை தீபமாய் ............
உரிமைகள் தேடும் உணர்ச்சிக்காரனாய் ...
கடைசி வரை போராடி ...
கடைசியில் வென்று மன நிறைவோடு கடற்கரை ஓரத்திலோ ...........
இல்லை
சுதந்திர நாட்டிலோ.....
இல்லை உரிமைகளை மீட்டெடுத்த தருணத்திலோ .
ஒரு வெற்றியாளனின் இதழ்களில் தோன்றும் சிறு புன்னகையே வெற்றியின் ஒரு பரிணாமம் ....
மற்றொன்று ????????????

........

எழுதியவர் : mathi (23-Aug-13, 5:06 pm)
சேர்த்தது : yaazhinumnanmozhiyaal
பார்வை : 53

மேலே