என்னிலில்லை நான்...!

இருபதாம் நூற்றாண்டுகள்
கடந்து
இருபத்தியொன்றாம்
நூற்றாண்டில் காலடி வைத்து
விட்டது
பூமியனும் நாடு...!

இருபது ஆண்டுகள் கடந்து
இருபத்தியொன்றாம்
ஆண்டில்
அடியடுது வைக்கிறது உன்
உடலெனும் கூடு...!

அதற்கு வாழ்த்து சொல்ல
இருக்கிறதே
நான் பட்ட பாடு...!

சொல்ல முடியாது
சொல்லில் வடிக்கிறேன்..

கற்க முடியாது
கல்லில் வடிக்கிறேன்..

படிக்க முடியாது
பாலில் வடிக்கிறேன்..

வான எல்லையை
இதுவரை கண்டதில்லை
உன்னில் கண்ட போது
என்னிலில்லை நான்....!
உன்னுள் கலந்து விட்டேனடா...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (5-May-10, 9:14 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 2829

மேலே