!!!===((( இது கவியல்ல நிஜம் )))===!!!

பிறப்பு என்பது இன்பமடா
இறப்பு என்பது சோகமடா
பிறப்பும்,இறப்பும் இயற்கையடா
அதை நீ உணர வேண்டுமடா

வென்றால் திமிரில் ஆடாதே
தோல்விக்கு பயந்து ஓடாதே
வெற்றியும்,தோல்வியும் சகஜம்டா
இதுவே வாழ்வின் நியதியடா

கவலையில் மூழ்கி வாடுகிறான்-பின்
மதுக்கடை தேடி ஓடுகிறான்
மருந்தென மதுவை அருந்துகிறான்-அது
விஷமென தெரிந்தும் விரும்புகிறான்

மங்கையை கண்டால் மயங்குகிறான்
மனம் விட்டு பேச தயங்குகிறான்
இயந்திரம் போல் அவன் இயங்குகிறான்
இன்பம் காணவே ஏங்குகிறான்

உழைத்திட இருகரம் உனக்கிருக்கு
அடுத்தவன் உதவி ஏன் உனக்கு
உன்னால் முடியும் வெற்றி பெற
வெற்றிக் கதவினை முட்டி திற

எழுதியவர் : ராஜ்கமல் (26-Aug-13, 5:22 pm)
பார்வை : 81

மேலே