தரணி தவிக்கட்டும் தமிழா...

தரணி தவிக்கட்டும் தமிழா
தரணி தவிக்கட்டும் தமிழா..
பேரணியும் பெருங்கூச்சலும் போதா..வெறும்
பேரணியும் பெருங்கூச்சலும் போதா...
ஊரணி எல்லாம் ஓரணி கண்டு
சாரணராகி சமுத்திரம் கடப்போம்...அதுகண்டு
தரணி தவிக்கட்டும் தமிழா
தரணி தவிக்கட்டும் தமிழா.....

பள்ளிப்பருவம் எட்டாத பச்சிளம் குழந்தைகளை
கொள்ளியிட்டு கொளுத்திட கொடுக்காமல் சிதைத்தனரே
அள்ளிஅள்ளி தருவோம் அவர்தம் குருதியென
எண்ணிஎண்ணி கொதிக்குதேஅச் செல்வங்களின் புதைமண்ணும்...!
சோலையிளங் குயில்களாய் சுற்றித் திரிந்த
சேலைச்செந்தாமரை யாம்நம் சகோதரிகளை
பாலை வனமென படுதுகி லுரித்தான்
வாலை உரிப்போம் வன்மத்தை எரிப்போம்
தரணி தவிக்கட்டும் தமிழா.. அதுகண்டு
தரணி தவிக்கட்டும் தமிழா..

பாரதத்து பேரம்நமை பகுத்தெறிவ தென்றால்
வீரத் தமிழர்நாம் வெகுந்தெழல் வேண்டாமா ?
பரணி பாடச்செய்வோம் நம்சிங்களத்து வெற்றியை
நேரமிது நமக்கு நம்பலம் பறைசாற்றவே.....
தரணி தவிக்கட்டும் தமிழா.. அதுகண்டு
தரணி தவிக்கட்டும் தமிழா..

எழுதியவர் : காசி. தங்கராசு (27-Aug-13, 4:14 am)
பார்வை : 82

மேலே