முன்னேறு

முன்னேறு
என் வாழ்வில் சுமைகளை சுமக்க கற்றுக் கொண்ட இடம் பள்ளிக் கூடம் - புத்தகப் பையால்...
அது சுகமோ சுமையோ தெரியவில்லை..,
இன்றும் சுமந்து கொண்டிருக்கிறேன் சுகமாக...
சுமப்பதை எல்லாம் சுமையாக கருதி விட்டால்..
உன் சுகங்களையும் வெற்றியையும் எப்படி சுமக்க போகிறாய்.....??
அதுவும் சுமை தானே...!!!
கண்கள் கண்ணீரையும்..
உதடுகள் வார்த்தைகளையும்..
தானாக கொட்டி விடும்..
ஏமாறும் தருணங்களில்...!!
நீ ஏமாற்றங்களை எல்லாம் எதிர்பார்ப்புகளாக மாற்று..
தோல்விகளை எல்லாம் தொடக்கங்களாக மாற்று..
இன்னல்களை எல்லாம் இன்பமாய் ஏற்றுக்கொள்..!
நண்பா,
இதோ இதை உன் உள்ளத்தில் எழுது ..
தோல்விகள் என்பது துயரம்,
நீ துடைத்திடும் வரையில் தான்...
வெற்றிகள் என்பது இமயம்..,நீ எட்டிடும் வரையில் தான்..

எழுதியவர் : சிதம்பரம் (27-Aug-13, 8:21 pm)
பார்வை : 85

மேலே