அம்மா!!!

பிதிர்க் கடன் தீர்க்க
வழி நூறு உண்டு
எந்தன்
பிறவிக்கடன் தீர்க்க
வழி ஏதும் உண்டா???

யாரும் சொல்லாது
அறிந்த மொழி - அம்மா
வையத்து உயிர்யாவும்
முதல் மொழிந்ததும் - அம்மா!!!

சிறு குழந்தை அறிந்த மொழி
அழுகை ஒன்றே
அதற்குள்ளும் அர்த்தம் நூறு அறிந்தவர்
அன்னை ஒன்றே

உதிரம் ருசி பார்க்க
சுரந்த உமிழ்நீரை
தாய்ப்பால் கொண்டு தணித்து
என் உமிழ் நீரிலும்
உயிர் கலந்து ஊட்டியவள் தாயே!!!

உதிரமே - தாய்ப்பால்
விஞ்ஞானத்திற்கு
தாய்ப்பாலே - பாசம்
எஞ்-ஞானத்திற்கு!

அன்னை இன்றி மாந்தர் ஏது இவ்வுலகில்
அன்னை இன்றி மாந்தர்கு ஏது - இவ்வுலகில்

கோபப்பட்டு சிலவார்த்தை...
கை நீளும் கன்னம் வரை...
வலிக்காமல் அழுதிடுவேன்
வலித்திட்டோ, என்று அழுதிடுவாள்..

கால கடிகாரம்
சுற்றாது தாயின்றி
அவள் வாழ்க்கை கடிகாரம்
சுற்றாது நானின்றி...

மொத்தத்தில் மொத்தமும் - அம்மா
சொர்க்கத்தின் தலை நகரும் - அம்மா

பிதிர்க் கடன் தீர்க்க
வழி நூறு உண்டு
எந்தன்
பிறவிக்கடன் தீர்க்க
வழி ஏதும் உண்டா? - அம்மா!!!

எழுதியவர் : Kajen Titans (27-Aug-13, 9:12 pm)
பார்வை : 153

மேலே