நிழல்களின் நிஜங்கள் !

நிழல் தராக் கூரைகளும்
நிஜமில்லா முகங்களும்
நினைவோடிப் போகும் ..
நிறமில்லா நிழற்கனவுகளின்
ஓவியக் கீறல்கள் வகைத்
தூரிகையால் பலவண்ணம்
பெறும்போது ...
புலப்படும் வழியொன்றின்
விழிகள் தோறும் நிழற்சித்திரங்கள்
முகங்களின் நினைவுகளும்
கூரைகளின் நிழல்களும்
நிஜமாக்கப்பட ..

எழுதியவர் : கார்த்திகா AK (28-Aug-13, 5:34 pm)
பார்வை : 80

மேலே