ஐந்து ரூவா
****ஐந்து ரூவா****
ஏழையின்
கண்ணீர் துளி
அங்கங்கே
பளிச்சிடுகிறது
நீர்த்தேக்கமாக...!
காரணங்களோடு
கலங்குகிறது
கண்கள்...!
இமைகளிடம்
கேட்காமல்
வழிகிறது
கன்னம்
நனைகிறது...!
ஆட்சியில்
அமர்ந்திருப்பவன்
அறிக்கை விடுகிறான்
ஐந்து ரூபாயில்
அளவற்ற
சாப்பாடேன்று...!
அரவைறு நெறைய
ஆத்தா தாலி கயிற
அடமானம் வச்சி
அடுப்பங்கர ஓல
கொதிக்கும் முன்ன
அவசர செய்தி
சொன்னான்
வெங்காயம்
நூறு ரூவானு..!
வேதனை மறந்து
கண்ணீர் வழிந்தது
காற்றுக்கு தெரியாம
கதறினோம்...!
கை பருக்க
சோத்துக்காக
கால்கடுக்க
நிக்கிறோம்
எச்சி எல எப்ப
எரிவானு...!
சத்தியமா
மவராசன்
சொன்னது
உண்மைதான்
என் ஆத்தா
அப்பனோடு
சேத்து ஒத்த ரூவா
நெத்தி காசு
ஐந்து ரூவா...!
****கே.கே.விஸ்வநாதன்****