பாடாய் படுத்துதே !....
பார்க்க பார்க்க ஆசை வரும்
ஆசையால் அது !..
இடம் விட்டு இடம் மாறும் !
இல்லாதவனுக்கு தொல்லையாய் அது !
துள்ளி துள்ளி தொலைதூரம் போகும்
அதை தொடாதவன் யாருமில்லை !
தொட்டவனுக்கு நிம்மதியில்லை !
தொல்லையாய் அது !..
வரும் என்றால் தூக்கமும்
தொலைந்துபோகும் !
துக்கமும் துணைக்கு வந்து சேரும் !
தொல்லையாய் அது !..
அது சேர சேர
மனம் மாறும்
மனத்தால் குணம் மாறும்
குணத்தால் மதி மாறும்
மதியால் விதி மாறும்
விதியால் பகை மாறும்
மாறும் மாற்றங்கள் மாற
மனம்விட்டு போகும்
மனம் போக
மனத்தால் குணம் போக
குணத்தால் உறவு போக
உறவால் ஊரு போக
ஊரும் ஊன் எண்ணத்தால்
உறவும் பகையாக
பகையும் பாரமாக
பாரமும் பாதாளமாக
பாதாளமும் பணமுமாக
பாடாய் படுத்துதே
தொல்லையாய் அது !...
பணம் என்ற பாதாளம்
உயிர் உள்ளவரைதான் !!...
என்றும் அன்புடன்