"பசலை"

தலைவன் :

வஞ்சிதுணை விடுத்திருக்க, விழிநீரும் வருதோ,
வண்டுஅதும் மலரிழந்து, வாட்டமதன் வசமோ,
கண்டநாள் நெஞ்சமதில், காணுந்நாள் கனவோ,
அஞ்சுமனம் நஞ்சுமாகி மஞ்சமதில் துஞ்சலோ.

தலைவி :

தேய்நிலவு போலுமானேன் வானொளியைத் தேடியே,
தேசுமதும் தீர்ந்துபோனேன் தேவனனுனைத் தேடியே,
தேர்கொடியாள் வாடுகிறேன் தென்றலுனைத் தேடியே,
தேகதிட மற்றுப்போனேன் திருவாளனையே தேடியே.

தலைவன் :

களத்துறை தல்கடமையடி, இருப்பிடமுன் மனச்சிறை,
கலியன்மனம் கலங்குதடி, கண்ணீரென் விழித்திரை,
நினைவில்நீ நிதம்தானடி, நீள்வதோஎன் தேய்பிறை,
உளமே எனதுயிரே, உன்னுறவேஎன் கருவறை.

தலைவி :

யாழிசையும் துயரூட்டுது உயிர்வாட்டுது கணவா,
தோழியரும் சேடியரும் துணையல்லவே இறைவா,
அசலைதன் மணவாளா, மனப்புசலை நீயறிவாய்,
பசலையென் உயிர்வாங்குமோ, விரைவாய் நீவருவாய்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (28-Aug-13, 6:29 pm)
பார்வை : 75

மேலே