ஊழல்களுக்கு முடிவு...!

ஂகண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்...
.
ஂவாழ்விலே பண்பிருந்தால்,
வரலாற்றிலே வலிமை வரும்.
.
ஂசிந்தையிலே சிறப்பிருந்தால்
சரித்திரத்திலே செழுமை வரும்.
.
ஂசொல்லிலே உண்மையிருந்தால்
சமுதாயத்திலே சக்தி வரும்.
.
ஂசெயலிலே தீவிரம் வந்தால்
சீரழிவுகளுக்குமுடிவு வரும்.
.
ஂசமூகத்திலே ஒற்றுமை இருந்தால்,
சந்தர்ப்பங்கள் தானாக வரும்.
.
ஂகனவுகளிலே லட்சியம் இருந்தால்,
செயல்களில் முதிர்ச்சி வரும்.
.
ஂஉள்ளத்திலே துணிவிருந்தால்
ஊழல்களுக்கு ஓய்வு வரும்.