கண்ணனின் பாத சுவடு !!!!(கார்த்திக் )

பாத சுவட்டினில் கூட
பசும்பால் மணமே வீசும்
பணிந்து நாம் தொழுதால்
பாவங்களை போக்கும்
பக்கத்தில் போய் நின்றால்
நண்பனாக பார்க்கும்
பகட்டுத்தன மனத்திற்கோ
பதிலடியை கொடுக்கும்
பாசத்தோடு போய் நின்றால்
பக்தனாக ஏற்கும்
கண்ணனின் பாத சுவடும் கூட
ஏற்கும் !!!!!

சியாமளனின் மேனியெங்கும்
புதுமலரின் வாசம்
சிரித்தமுகம் நாம் கண்டால்
சித்தமலம் போக்கும்
தர்மத்தினை காத்து நிற்க
சூழ்ச்சிகளும் செய்யும்
பாஞ்சசண்யம் ஊதி நின்று
பாரத போர் நிகழ்த்தும்
பற்றறுத்து வெற்றி பெற
பகவத் கீதை சொல்லும்
கண்ணனின் பாத சுவடும்
கீதை சொல்லும் !!!!

மூங்கில் சோலை எங்கிளுமே
நீலநிற வண்ணம்
நினைத்து பார்க்க நெஞ்சினிலே
நிம்மதியும் பொங்கும்
சுவாதிதின பொழுதுகளில்
சுகந்த இசை கேட்கும்
சத்தியத்தின் வாசலினை
அடைந்துவிட்ட நாளில்
சுத்த இசை சுகந்த இசை
நெஞ்சினிலும் இசைக்கும்
கண்ணனின் பாத சுவடும்
அதை ரசிக்கும் !!!!

பக்தி பரவசத்தில் மனமுழுதும்
ஆட்டம் ஆட ஏங்கும்
அதை பார்த்து விட்டால்
மயிலும்கூட தனதிறகை தூவும்
பிரபஞ்ச மொழி கண்ணனிடம்
அருவி போல கொட்டும்
அதை புரிந்துகொண்டால்
பிறவியிலே முக்திநிலை கிட்டும்
போகநிலை கடந்தால்தான்
யோக நிலை வாய்க்கும்
கண்ணனின் பாத சுவடும்
அதை காணத்தானே ஏங்கும் !!!!

------------------------------------------------------------------------
என்றென்றும் அன்புடன் '
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (28-Aug-13, 7:08 pm)
பார்வை : 120

மேலே