வெண்பிறை
உன் பூ
முகத்தில்
புள்ளி வச்சி
கோலம்
போட்டது
யார்.....!
உன் அழகு
முகத்தில்
பொன் சிரிப்பை
சிதறவிட்டது
யார் .....!
உன் மீன்
விழிக்குள்
இரு கரு
வைரத்தை
பிரகாசிக்க
விட்டது
யார் ...!
வெண்நிலவில்
பூத்த பொன்மணி
நீதானோ....!
பூமிக்கு
தவழ்ந்து வந்த
பட்டு
வெண்பிறையே...!!!
****கே.கே.விஸ்வநாதன்****