என்னுயிர் தோழா
.
என்னுயிர்
நண்பனே...!
தாயிழந்த
உனக்கு
தாயானேன்....!
நிம்மதி இழந்த
எனக்கு
நிழலானாய்...!
துன்பத்தில்
இமை
துடைப்பதிலும்
இன்பத்தில்
கை சேர்வதிலும்
உயிராகவே
உடன் இருந்தாய்....!
எமனுக்கு
துணை நிற்க்க
எனக்கு தெரியாமல்
காதல் வலையில்
விழுந்தாய்...!
பணத்தாசைப்
பிடித்த
அந்த சண்டாளி
சாகசம் காட்டி
உன்னை
சாகடித்து
விட்டாலே...!
கடைசியில்
தூக்கு கயிற்றால்
உன் கழுத்தை
முத்தமிட
செய்தாலே...!
நம் கனவெல்லாம்
காற்றோடு
கறைந்து
விட்டதடா...!
நம் பிரிவால்
என் இதயம்
குருதி
வடிக்குதடா...!
உன் நினைவு
நாளில்
ஒரு துளி
கண்ணீராவது
தரை நோக்கி
விழுமடா....!
இந்த வருடம்
நீ நித்திரையில்
வந்து நினைவுப்
படுத்தியும்
எப்படி
மறந்தேனடா...!
என் கண்ணீரல்லாம்
செண்ணீராக
வழியுதடா....!!!
****கே.கே.விஸ்வநாதன்****