தோழி வாழ்த்து !!

ஒளிமயமான விளக்கின் சுடர் போல் ....!
நாத வடிவான கீத ஒலிபோல் ....!
காரிருள்சூழ் கானக அமைதிபோல் ....!
கரைமோதும் அலைகடல் இரைச்சல்போல் ....!
கொட்டும் மலையருவியின் பேரொலிபோல் ....!
பூஞ்சோலைதவழ் சுகந்த தென்றல்போல் ....!
சாரல்மழை மேனிநனைக்கும் இனியசுகம்போல்....!
இதயமதை குளிர்விக்கும் மழலைமொழிபோல் ....!
இதழ்விரித்து மணம் கூட்டும் வாசமலர்போல் ...!
நம்நட்பு என்றும் ஒளிரட்டும் ....!!! ...மிளிரட்டும் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Aug-13, 10:30 pm)
பார்வை : 347

மேலே