மேக முத்தம்

பச்சை வர்ண
தோகை விரித்த
என் கிராமம்...!

ஜன்னல் ஓரமாய்
சத்தமிடும்
சிறுதுளி சாரல்...
கைக்குள் அடைத்து
இதய குளிரால்
இன்பமுற்ற
நாட்கள்...!

வண்ண மயிலாக
வானில்
பறந்து
வந்தாய்...!
என் குடுசை
வீட்டருகில்
கோலப்பூவாக...!

காலை
வேளையில்
கதிரவன்
ஒளி பட்டு
மின்னியது
உன் பொன்னுடல்...!
மின்னலாய்
துடித்தது
என்னுடல்...!

உன் இமை கண்ட
நாள் முதல்,,,
என் இமை
மூட மறுகிறது...!

உன் பாத கொலுசு
சத்தம் கேட்டு
காலையில் கூவும்
கோழிகூட
குதுகளத்தோடு
குருகி படுத்து
வாய் மூடியது....!

தூரம் உன்
முகம் கண்டு
துடித்த
என் உதடு
ஊமையனது
நீ என்னருகில்
வரும்
போதெல்லாம்...!

என்னுள் இன்ப
ஊற்றாக ஊறிய
இனிமை
கலந்த
காலங்கள்...!

காற்றும் விடை
கொடுத்தது
கலங்கிய
என் கண்ணில்
தூசியாக
படர்ந்தது...!
உன் நினைவு...!

தெருவோரங்களில்
உன் நிழல்பட்ட
இடமெல்லாம்
என் கண்ணீர்த்துளி....!

உன் தேக வாசம்
உறிஞ்சிய
பனித்துளி
என்மேல்
விழுந்து
இதயம்
நனைக்கிறது
செந்நீர்த்
துளியாக...!!!


*****கே.கே.விஸ்வநாதன்*****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (29-Aug-13, 6:47 pm)
Tanglish : maega mutham
பார்வை : 141

மேலே