பிரச்சனைக்குத் தீர்வு என்ன ?

மூழ்கி இருக்கையில்
மூச்சடைத்தால்
முழுசக்தி தனை எடுத்து
முட்டி மோதி எழுகின்றாய்....!

முன்னே சிறு பிரச்சனை என்றால்
முணகியே அழுகின்றாய்...!

முடியுமாப்பா முடியும்....!
முயற்சித்துப் பார் புரியும்....!

மூடியது மேனி முக்கால சக்தி அது
முடியும் என்ற உன் செயலில் உறுதி....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Aug-13, 4:08 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 91

மேலே