குறை கூறாமல் அனைத்தையும் நிறையாக்குவோம்
தன்னை கட்டுப் படுத்துவது
விண்ணை எட்டிப் பிடிப்பது.....!
உன்னை சுட்டிக் காட்டுவது
என்னை குட்டிக் கொள்வது.....!
கூட்டத்தை குறை கூறி
குவளை மலர்கள் மலர்வதில்லை....!
தவளை சத்தம் குறை கூறி
தண்ணீர் அருவி கொட்டுவதில்லை...!
தன்னை அறிந்து அது செயல் படுகிறது...
தன்மையாய் வாழ்வை ரசித்து விடுகிறது....!