இயற்கையின் இலக்கணப்பிழை!

வீழ்வதும் அழகே - நீரருவியாய் இருந்தால்! -தலை
தாழ்வதும் அழகே - நெற்கதிராய் இருந்தால்!
தொடர்தோல்விகள் அழகே - அலைகடலாய் இருந்தால்!
தெளிவின்மையும் அழகே - படர்பனியாய் இருந்தால்!
சிதறல்கள் அழகே - விண்மீனாய் இருந்தால்!
கதறலும் அழகே - கார்முகிலாய் இருந்தால்!

அழகின் உருவாய் இருப்பதை எல்லாம்
அழிவின் உருவாய் பார்ப்பது உனதுபிழையோ
அல்லது, மனிதா!
நீயே இயற்கையின் இலக்கணப்பிழையோ?

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (30-Aug-13, 11:46 am)
சேர்த்தது : KRISHNAN BABU
பார்வை : 97

மேலே