உன் நினைவின்றி துடிக்காது என் உயிரே.

அன்பே சொல்லித்தான் அழைத்து வருவாயா உன் விழிகளை

பார்த்தவுடன் என்னை கொன்றுவிடு என்று..

உன் பார்வையின் கூர்மையால் காயம் பட்ட‌ என் இதயம் மீண்டும்

உன் பார்வை என்னும் மருந்தால் தானே குணமாகும்..

உன்னை பார்த்த‌ பொழுதுகளில் என் சுவாசம் தடை பட்டதடி...

மெல்லத் திரும்பிப் பார் உன் காலடியில் கிடக்கும்

என் இதயம் ஒரு முறை பூக்கட்டும்...

நீ விலகிச் செல்கிறாய் இருக்கட்டும் ஒரு அனுமதி கொடு

உன் நிழல்லாவது என் மீது விழட்டும்...

நெற்றிப் பரப்பில் முத்தமிடும் உன் கூந்தலின் நுனிகூட‌ எனக்கு பொக்கிஷமே...

நீ வெட்டிப்போடும் உன் நகங்கள் கூட‌ நட்சத்திரமடி எனக்கு...

நேற்றய‌ பொழுதுகள் உன் நினைவின் வரலாறு...

நாளைய‌ பொழுது என் கற்பனையின் கவிஉலகம்

இன்றய‌ பொழுது எதிர்பார்பின் உற்சாகம்

இப்படினகர்த்தும் என்னை ஏமாளி என்றும்,

கோமாளி என்றும் எண்ணுபவர்களுக்கு

புரியவா போகிறது என் காதலும், நம் எதிர்காலமும்...

நீ இன்றி வாழ்வேது கண்மனியே...

உன் நினைவின்றி துடிக்காது என் உயிரே.

எழுதியவர் : ஹனி ... (30-Aug-13, 3:29 pm)
சேர்த்தது : hane
பார்வை : 152

மேலே