என்னுயிர்த் துடிப்பு

பன்னீர் அருவியாக உன்
பாதம்
பட்ட இடமெல்லாம்
பல்சுவை நீர்
சுழற்சி...!
நான் குடித்த
மிச்சம்...
பாறை இடுக்கில்
பல்லிளிக்கிறது...!
உன் முகம்
முழித்த
நாள் முதல்
என் மூச்சு
சத்தம்....
உன் முந்தானை
விசிறியானது...!
நாம் நடந்த
பாதையல்லாம்
எறும்புக் கூட்டம்
எட்டி நின்று
வேடிக்கை
பார்த்தது...!
உன் இமை
பார்த்து
காதல்
பூத்தேன்
சாதி மதம்
மறந்து....!
இன்னிசை
மழையாக
இதழ் மூடி
இதயம்
திறந்தோம்...!
உன்னை
ஈன்றவர்கள்
நம் காதல்
மழையை
கைக்குள்
அடக்கினர்...!
பழகிய காலம்
நினைத்து...
தேன் இதழ்
உதட்டில்
சாதி விஷம்
நனைத்து...!
கடைசி
காதல் பூ
சூடி வந்தாய
புன்னகை
பூத்து...
நம் கண்கள்
கண்ணீரில்
முழ்கின
பார்வை இழந்து
உன் ஸ்பரிசம்
படர்ந்தேன்...!
கால்கள்
நடுங்க
இமை சொருகி
விழுந்தாய்...!
உடல் பிரியும்
உயிர் கண்டேன்...!
இதயம் வெடித்து
ரத்தம் வடித்து
அழுதேன்...!
என்னுயிர்த் துடிப்பு
நிற்கும் வரை..!
*****கே.கே.விஸ்வநாதன்****