தமிழ், தமிழன், தமிழின் வரலாறு:
தமிழ்:
இசைக்கு ஒரு மொழி
இசைக்கும் ஒரே மொழி
கற்காலத்திலும், தற்காலத்திலும்
மானுடன் விழிகண்ட
ஒரே பொற்கிழி!
தமிழன்:
தலைவனிழந்து
தறுதலையிடம்
தலைதாழ்ந்த
ஒரே தமையன்!
முன்னவன்
சாமானியனாயினும்
தேகம் மண்ணுண்டதும்
நடுகல்லென கடவுளாக்கப்பட்டவன்,
பின்னவன்
வாகை சூடியவனாயினும்
வாடைக்கடவுளுக்கும்
வெண்நூல் மாக்களின்
சாதிக்கும், மதத்திற்கும்
இரையாக்கப்பட்டவன்!
தமிழின் வரலாறு:
பதிவுகளற்ற படிமங்களின்
எச்சங்கள்!
மலையாளிக்கு
அது ஒரு திரிப்புக்குள்ளாகும்
தின்பண்டங்கள்!
பாரதத்திற்கு
அது ஒரு மறைக்கப்படவேண்டிய
மந்திரங்கள்!
உலகிற்கு
அது ஒரு உற்றுநோக்கப்பெறா
உண்மைகள்!
தமிழனுக்கு
அது ஒரு மறக்கப்படவேண்டிய
மதிப்புகள்!
எனவேதான் தமிழன்
மதிப்பையும்
அடையாளத்தையும்
இழந்த
அகதிகள் என்றானான்!
தமிழனும், தமிழும் எழ வேண்டும்!!!