நடு வீதி கூடம்
ஆசை மகனை
பெற்றெடுத்து
உச்சி முகர்கையில்
உயிருக்கு
உயிர் வந்தது...!
உள்ளமும்
வெள்ளமாய்
கரைந்தது....!
நீ நடை
நடந்து
பவனி
வரும்போது
என் நாடிக்கு
புது தேம்பானது...!
காலங்கள்
காற்றுக்கு
போட்டியாக
முண்டி அடித்து
முன்னேறுகிறது...!
வாலாட்டும்
நாய்க்கு
வசந்த மண்டபம்...!
தாலாட்டிய
தாயிக்கு
வீதி மண்டபம்...!
உன் உதட்டு
எச்சில்
சோத்து
பருக்கைக்கு
சண்டையிட்ட
காலமும்...!
நீ உண்ட பின்
ஓரம் வைத்த
சோத்துக்காக...!
எத்தனை
நாளடா
பசியால்
ஏங்கி சாவது...!
ஊர் திரண்ட
வேளையில்
உன்னை
பெத்தேடுதோம்
பேர் சொல்வாய்
என்று....!.
பார்வை மங்கிய
பின்னும்
பரதேசியாக
பார்கிறாய்...!
போதுமட
என்வயிற்றில்
பிறந்த
முத்து
மாணிக்கமே...!
தெருவோரம்
கிடக்கும்
காகிதங்களாக
கிடக்கிறோம்
காற்றடித்த
திசையல்லாம்
பார்ப்போம்
கண்ணீரோடு
கைகோர்த்து...!
*****கே.கே.விஸ்வநாதன்****