மிட்டாய் தாத்தா..!

அம்மாவிடம் அடித்து புடித்து..
அழுது புரண்டு
கையில் கடிகாரமாய் வாங்கி சாப்பிட்ட
மிட்டாய் கார தாத்தா..

இப்போதும் என் வீடு வழியாய்
கடந்து செல்கிறார்..
ஆசையாய் என் மகளிடம்
வாங்கி தருவதாய் சொன்னேன்..

இதெல்லாம் hyginic சாப்பிடக் கூடாதுன்னு
மிஸ் சொல்லிர்காங்க
என அவரை அருவருப்பாய் பார்க்க...

என் முறையோடு முடிந்தது அந்த உறவு..

அவர் தலைமுறையோடு முடியப்போகிறது
அவருக்கும் மிட்டாய்கும்மான உறவு..

எழுதியவர் : கவிதாயினி (1-Sep-13, 6:49 pm)
பார்வை : 131

மேலே