தவமாய் தவமிருந்து...

ஜன்னலோரம் எட்டிப் பார்த்த
முல்லை கொடி சொன்னது....
உன் வீட்டிற்கு உறவினர்
வருகை என்று...

மொட்டை மாடியில்
கவி பாடிய காக்கை சொன்னது
உன்னை பார்க்க
விருந்தாளி வருவதாக.....

வாசலில் பால்காரர்
சொன்னார்
உங்கள் வீட்டிற்க்கு
யாரோ வருவார்களென
தோன்றுகிறது
அதிகமாக பால் வாங்குங்கள் என்று...

எனக்கும் தோன்றியது...
இன்று யாரோ வருவார்கள் என்று....

ஆனால்
தவமாய் தவமிருந்து
பத்து மாதம் கருவில் காத்து
உயிர் கொடுத்து வளர்த்த
என் மகன் வருவான் என்று
நானும் எதிர்பார்க்கவில்லை......

வந்தது மகனே என்று
சந்தோஷப்பட முடியும்.....

நிலத்தை எழுதி வாங்கி விட்டு
என்னை நிராதரவாக விட்டு செல்ல
வந்த போதிலும்-வந்தது
என் மகன் என்றே
சந்தோஷப்பட முடியும்.....

எழுதியவர் : சாந்தி (1-Sep-13, 11:26 pm)
பார்வை : 85

மேலே