உள்ளம் என்பது கோயில்
பேசும்போது கவனமாய் கேளு
பகவான் கருவறையில் இருப்பதாக....!
வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன்
இதயத்தில் விழும் மலர் அர்ச்சனைகள்.....!
பூஜிப்பவர்கள் உன் எதிரில்
பூரிப்போடு பேசும் தோழமைகள்......!
கடவுள் விக்கிரகத்தில் அம்மலர்களை
கருணையோடு நீ மாலையாக்கு....!
கால்வாய் கழிவுகளில் மலர்ச் சரத்தை
கண்டபடி மிதக்க விடாதே.....!
எல்லாம் உன் நன்மைக்கே.....
எல்லாம் உன் நன்மைக்கே...!