திருந்தி வாழுங்கள் வாழும்வரை

​இருக்கைகள் இரண்டேதான்
இருப்பவரோ ஏழு பேர்தான் !
ஆர்வக் கோளாறு இதுதானா
ஆபத்து என்பதும் இதுதானா !

கவலை இல்லை அவர்களுக்கு
கண்டிடும் நமக்கு கவலையே !
இருசக்கர வாகனம் பாவமே
இருந்தும் இழுத்து செல்கிறது !

விதிகளை மதிக்காத இவர்களும்
வீதிகளில் உலவிடும் நிலையேன் !
சிந்திக்காத மானிட உள்ளங்களே
சிந்தையே இல்லையா உங்களுக்கு !

வாழ்ந்திட நினையுங்கள் நானிலத்தில்
வாழ்க்கை பயணத்தை தொடருங்கள் !
திருந்தி வாழுங்கள் வாழும்வரை
திரும்பி பாருங்கள் வாழ்க்கையை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Sep-13, 8:14 am)
பார்வை : 204

மேலே