விவசாயி

மண்ணோடு மல்லுக்கட்டி

கேணி தண்ணி எரச்சிக் கொட்டி
வாய்க்கா வரப்பு வெட்டி
வெத நெல்ல விசிறிக் கொட்டி

நெல்லு நாத்தாகி
நாத்து செடியாகி
செடி வளர்ந்து
நெல்லா சிரிக்க
நாளெல்லாம் தவம் கிடக்கும்

நான்தான் விவசாயி

விஞ்ஞானம் தோத்து போனா
செத்து போகும் உங்க பொழப்பு
விவசாயம் மட்டும் தானே
மண்ணுக்கும்
மனுஷனுக்கும்
உயிர் துடிப்பு

எழுதியவர் : சசிகலா (3-Sep-13, 5:19 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 65

மேலே