அன்பின் நிலை

அன்பில் அவ்வமயம்
அடிமை ஆகிப்
போகின்றோம்

ஆறுதலும் அன்புள்ளமும்
அரவணைக்கக்
காண்கின்றோம்

உள்ளம் தகுமோ என
உள்ளதை சொல்ல
மறுக்கிறோம்

உள்ளன்போடு இல்லாத
உறவுகள் காணும் போது
உலகை வெறுக்கிறோம்

காரணத்தாலும் கவலையாலும்
அன்பை வலுவிழக்க
முயல்கிறோம்

பிரிந்த போதும்
பிரிந்த பின்
தொடர்ந்த போதும்

அன்பு கொண்டே
அகிலம்
நிறைகிறோம்

எண்ணியதும் இறங்காத
எண்ணமதை
விட

எண்ணாத போது
இறங்கும் எண்ணமே
அழகு

என்பதை உண்மை
என உணர்ந்து
கொள்கிறோம்

நடமாடும் போதும்
உறவாடும் போதும்
அன்பையே நெஞ்சமதில்
சுமக்கிறோம்

பொய்களும் அழகு தான்
என்பதை புண்பட்ட
வேளையில் அறிய
மறுக்கிறோம்

அன்பை சிதைக்கும் என்றால்
வாய்மையும் வன்மை தான்
என்பதையும் அறியாமல்
மனம் தவிக்கிறோம்

என்றும்,அன்பே
அமரத்துவம் அதுவே
பாரத தத்துவம்

எழுதியவர் : தியா (3-Sep-13, 5:25 pm)
Tanglish : anbin nilai
பார்வை : 137

மேலே