...........காதலின் அந்தப்புரம்.......

அழகாய் அறிமுகமாகி,
அரிதாரம் பூசிய எழிலுடன்,
அன்றாடம்,
வெட்டிக்கொள்ள முயல்கிறோம் !
எங்களின் வேர்களை வெறிகொண்டு !
காதல் தண்ணீர் ஊற்றி வளர்த்தது,
எங்களின் உயிரை !
இன்று அதுவே கண்ணீர்விட்டு அழுகிறது !
எங்களின் கயமையை நினைத்து !
ஆர்வமாய் சந்தித்து ஆக்ரோசமாய்ப்பிரிவது,
எங்களின் வாடிக்கையானது !
சேர்ந்திருக்கிறோம் பேர்வழி,
ஒருவரை ஒருவர் சூநியமாக்கவே,
எமது தளராத போராட்டம் !
பேசிப்பிரிந்துவிடுதல் சாலச்சிறந்தது !
அதுபுரியாமல் ஏசி அழிக்கிறோம்,
ஒருவர் மனதை ஒருவர் !
போகட்டும் !
நம் வாழ்க்கை பயனற்றுபோனது !
நன்றாக இருக்கட்டும் என்ற நினைப்பு,
நங்கூரமாய் இறங்கி நகரவிடாமல்,
செய்துவிடுகிறது எங்களின் போர்க்கப்பலை !
எள்ளி நகையாடி எவ்வளவு கேவலப்படுத்தினாலும்,
என்னை எதிர்பார்க்காமல் போவதில்லை,
அவள் பொழுது என்பதுமட்டுமே திண்ணம் !
சிரித்துக்கொண்டு வருபவள்,
சிங்கமாய் சினப்பட்டு மாறும்பொழுது,
சிறுநரிகள் எழுந்து ஓடத்தான் செய்கிறது மனதில் !
தடுக்கயியலாமல் கொதித்து விழுகிறேன் நானும் !
பின் அவமானம் புடைசூழ சபிக்கிறேன் என்னையே !
எது நடந்து என்ன?
அவள் நிம்மதி நானில்லை தற்போது,
எது முதிர்ந்த காதலின் அந்திமகாலம் !
முடிந்துபோகவேண்டிய கட்டாயம் எதற்கு !
எங்கே ஒன்றை உணர்கிறேன் நன்றாய் !
காதலின் அந்தப்புரங்களில் காதலே அழுதுகொண்டிருக்கிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (3-Sep-13, 7:26 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 54

மேலே