வாழ பழகுவோம் .

தத் துவங்கள் சோறு போடாது
தானியங்கள் அள்ளிக்கொடுப்பதை போல
பேச்சும் சொல்லும் அலங்காரத்திற்கு
உழைப்பும் வேர்வையும் ஆக்கத்திற்கு.
மும்மாரி விளைய மழையும்
நேரத்தில் செய்யும் வேலையும்
பலன் கிட்ட வகை செய்யும்
மன வளம் பெற நற் சிந்தனையும்
நல்ல படிப்பும் எண்ணமும்
மிகுந்த வாய்ப்பு நல்கும்.
இன்று செய்யும் நல்லது
பல முறையில் பெருகி
மலர்ந்து வழி கொடுக்கும்.
பேச்சைக் குறைத்து
உழைப்பை நம்பி
வாழ் பழகுவோம் .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Sep-13, 12:08 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 62

மேலே