மணியோசை.

மணியோசை கேட்டவுடன்
ஓடினர் மக்கள்
எங்கே ? எதற்கு?

வழிபாட்டு தளங்களுக்கு அல்ல
திரளாக அங்கு கூடவும் இல்லை
இறைவ னைகண்டு களிக்க்கவுமில்லை
மணியோசை அவர்களுக்கு
வேற்று சிந்தனையை அளித்தது
பயந்து நடுங்கி பதுங்கு குழிகளை
நோக்கி விரைந்து சென்றனர்
பதுங்கினர் இருந்தனர் அங்கே
வெகு நேரத்திற்கு நடுக்கத்தோடு .

ஓசை ஒன்றே திசை வேறு
காரியம் ஒன்றே காரணம் வேறு
ஓட்டம் ஒன்றே ஓடினது வேறு.
மனிதர்கள் ஒன்றே மாறினர் வேறு மாதிரியாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Sep-13, 11:50 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 73

மேலே