அனைத்திற்கும் இணையானவள் தாய். ..!

கோல்களனைத்தும்
கொலை வெறியில் பூமியை
மோதுவதற்கே சுற்றி வருகின்றன
சூரிய குடும்பத்தில்...
காரணம்,
தங்களிடத்து அனைத்தும்
இருந்தாலும்
"தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே
என்ற பொறமை தான்...
இப்படி சிறப்புள்ள பூமிக்கு
இணையானவள் "தாய்"...

விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும்
தான் பிள்ளைகள்
விண்ணிலிருந்து விழும் போது
பிரிந்து தான் விழும்....
இதை எண்ணி விண்னெனும் தாய்
கதறி அழும்...
அந்த கண்ணீர் தான் மண்ணில்
மழையை ஒன்று சேர்க்கின்றன...
இப்படி பேரன்பு கொண்ட விண்ணிற்கு
இணையானவள் "தாய்"...

மூன்று நிமிடம் சுவாசிக்க மறந்தாலே
இவ்வுலகம் நம்மை நேசிக்க மறந்து விடும்
நானாக சுவாசிக்க மறுத்தாலும்
தானாக சுவாசம் தரும் பாசமுள்ள
காற்றுக்கு இணையானவள் "தாய்"...

பல ஆகாரம் உண்டாலும் அவையெல்லாம்
உயிராதாரம் ஆகாது
நீராகாரம் உண்டால் தான்
உயிராதாரம் நிலைப்படும் அந்த
நீருக்கு இணையானவள் "தாய்"...

நெருப்பிற்கு மட்டும் தான்
நல்லவர்கள்,கெட்டவர்கள்
தேவை,தேவையில்லை
என்று எதுவும் தெரியாமல்
பற்றினால் எரிவேன் என்று
அடம் பிடிக்கும் ...
நெருப்பிற்கு மட்டும் இனையானவளல்ல
தாய்...!நேர் மாறானவள்...
தீயதை மட்டுமே தீயெரிப்பாள்....

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (9-May-10, 8:39 pm)
பார்வை : 2313

சிறந்த கவிதைகள்

மேலே