நீ அழகு

அனல் வீசும் மே மாதத்தில் கடும் பனி வீசியது அவள் என்னை பார்த்த பொழுது

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர் நிலவானது அவளின் பார்வையில்

பௌர்ணமி நிலவும் பளிச்சிட தயங்கும் அவள் முகத்தின் அழகை கண்டு

அன்னமும் நானிடும் அவள் நடை அழகில் குயிலும் தோற்றிடும் அவள் குரல் வளத்தில் கொடியும் நிமிர்ந்திடும் அவள் இடை அழகில் குற்றாலமும் வத்திபோகும் அவள் குழல் அழகில்
குறிஞ்சி மலரும் குறுகுறுக்கும் அவள் முகத்தை கண்டு ,
பிரம்மனே பார்த்து பிரமித்த அழகு
உன்னை பற்றி எழுத வரிகள் கிடைக்கவில்லை சொல்ல வார்த்தைகள் போதவில்லை

எழுதியவர் : வேலு (30-Dec-10, 10:01 pm)
சேர்த்தது : sakthivel.c
Tanglish : nee alagu
பார்வை : 1078

மேலே