மீண்டும் அவதரிப்பாரா கடவுள்

அக்கிரமங்கள் உலகிலே அதிகரிக்கும் வேளையில்
அவதாரம் எடுப்பதாய் அவன்சொன்ன வார்த்தைகள்
பொய்யாய் போகுமோ இல்லை
மெய்யாய் நடக்குமோ ...........

மனிதன் என்ற போர்வையில்
மிருகங்கள் வாழும் உலகிலே
தினம் தினம் சண்டைகள்
தெருவெங்கும் ரத்தங்கள் ...........

கொலைவெறி பிடித்தவர்களின்
கொள்ளையடிக்கும் செயல்கள்
நாளுக்குநாள் பெருகிட
நல்லவர்கள் பயந்திட ..........

ஒழுக்கமற்ற மனிதர்களின்
ஒவ்வாத செயல்கள்
கலிகாலத்தில் தொடர்கிறது
காமகளியாட்டம் .............

நேர்வழியில் நடப்பவர்கள்
சேருமிடம் சேர்வதில்லை
கூறுகெட்ட மனிதர்களின்
குறுக்குபுத்தி வெல்கிறது ............

தர்மத்தை மதித்தவனை
உலகம் மதிப்பதில்லை
தலைவராய் ஏற்றுக்கொண்டு
உலகை ஆள்வதில்லை ..........

ஏமாற்றும் புத்தியே ஏற்றம் காண்கிறது
நடிப்பவர்களின் நாடகத்தை உலகம் ரசிக்கிறது
உணமையான மனிதர்களை உலகம் புரியவில்லை
நல்லவர்களின் வாழ்விலே ஒளியென்றும் பிறப்பதில்லை ........

வருவதாக சொல்லி வாக்கு கொடுத்தவன்
வருவதாக தெரியவில்லை வாக்கும் பலிக்கவில்லை
கொடுங்கார மனிதர்களின் கூடார உலகமிது
கொடுமைகள களைந்து என்று மீளுமோ ?

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Sep-13, 4:27 pm)
பார்வை : 95

மேலே