மழலைகளாய் கிடப்போம்
வா
நாமிருவரும்
போர்வைக்குள் புதைந்துகொள்வோம் ...
காற்றும் உறங்கும்
நடுநிசியில்
நாம் மட்டும்
காதல் குடித்து
காமம் வளர்ப்போம் ...
உறுத்தும்
ஆடைகளை உதறிவிட்டு ...
பிறந்த மேனியாய்
திறந்து கிடப்போம் புத்தகமாய் ...
இதழில் இளைப்பாறி ..
உடலால் உற்சாக தேரிழுப்போம் ...
வெட்கக் குடை கிழித்து
வேர்வை மழையில் நனைவோம்
சத்தமில்லா இரவில்
முத்தங்களால் சுரம் படிப்போம் ...
சுகத்தின் வேர்வை சென்று ..
தேவைகள் தீராமல்
திரும்பி வருவோம் ...
நெருக்கமாய் இருந்து
மூச்சுக்காற்றில்
காதல் ராத்திரிக்கு
கைகொடுப்போம் ...
கணவன் மனைவி என்ற
கர்வம் மறைந்து ...
மௌனத்தின் மடியில்
மழலைகளாய் கிடப்போம் ...!!