எம் உயிர் மூச்சுக்கள்

வாழ்கின்றேன்
என் உயிர் மொழி மூச்சுக்களோடு...
உணர்கின்றேன்
என் உயிரெழுத்துக் களோடு ..!
சுவாசிக்கின்றேன்
என் மெய்யெழுத்துக் களோடு ...!
பார்க்கின்றேன்
என் உயிர்மெய் இமைகளோடு...!
கேட்கின்றேன்
மொழிகளை மெல்லிசையோடு ...!
பேசுகின்றேன்
இனிமை தேன் மொழிகளோடு...!
ரசிக்கின்றேன்
மற்ற மொழிகளோடு எம் தமிழ் மொழியையும்...!

எழுதியவர் : தயா (8-Sep-13, 9:56 pm)
பார்வை : 162

மேலே