இது 2113ஆம் ஆண்டு!
அன்னைக்கு சுகமில்லை
அதிவேக விரைவியில்
அத்திமரப்பட்டிலிருந்து
அரைமணியில்
அமெரிக்காவிற்கு வந்தான்
ஆல்பிரட்டு!
விரல்சொடுக்கும்நேரம்
ஓடிவந்து தொருவில்
வரவேற்றாள்
தங்கை தமிழ்மணி!
இப்போது பரவாயில்லை,
இயற்கை இதயம்
பொருத்தப்பட்டதிலிருந்து
அம்மாவுக்கு உன்ஞாபகமே என்றாள்..
பிள்ளையை பார்த்தமாத்திரத்தில்
பாசத்தோடு கட்டிக்கொண்டாள்
அன்னை பாத்திமா!
தெய்வத்திருக்குறளை
கைகளில்வைத்து ஓதியவாரே அருகில்
அப்பா சாக்கிசான்!
புதன் கிரகத்தில்
பெரியம்மா வீட்டிலிருக்கும்
பாட்டியுடன் நிகழ்திரையில்
கலந்து பேசினார்கள்!
பொங்கிய பாசத்தில்
புலகாங்கிதமாக இல்லம்!
அன்பாக சிலமணிகள்
போனது தெரியவில்லை!
பிரியாவிடைபெற்று
பிரிந்தான் மகன்..
மீண்டும் இந்தியா திரும்புகையில்
ஓங்கி உயர்ந்த இமயத்தில்
வெள்ளி நீரோடை!
கண்பட்டயிடமெல்லாம்
பச்சை பசுங்காடு!
வழியில் பாபராமகோயிலைப்பார்த்து
சிலுவையிட்டுக்கொண்டான்!
அடுத்தது பார்த்ததில்
ஆனந்தக் கண்ணீர்!
கங்கையும் காவிரியும்
கலந்தோடி செழிப்பான
ஆந்திரகேரலதமிழ்நாடு!
அருகில் இலங்கையில்
புத்தசிலைக்கருகில்
வள்ளுவப்பெருஞ்சிலை!
வணங்கி ஆசிபெற்றான்!
மனம் சாந்தியானது..
பயணப்புத்துணர்ச்சியில்
மீண்டும் தொடங்கினான்
தன் மாற்றுச்சூரிய ஆராய்ச்சியை!
இது அற்புதத்தின் நிகழ்காலம்!
மனிதம் எங்கும் தழைத்து
மானுடம் மகத்துவமாயிருந்தது!
புதுமைகளோடு புத்துணர்வோடு
பூமி அற்புதமாய் சுற்றிக்கொண்டிக்கிறது!
ஆம்!... இது 2113ஆம் ஆண்டு!