நிழல்

என்றும் கடமையைத் தவறாதவன்
பகைவனைக் கண்டாலும் அஞ்சாதவன்
இருளைக் கண்டதும் அஞ்சிடுவான்
வெளிச்சத்தில் தோன்றுபவன்

கருவரை முதல் இடுகாடு வரையிலும்
நமுடன் பயனம் செய்வான்

ஆதவனுக்கும் சந்திரனுக்கும்
எதிர் திசையில் தோன்றுபவன்
என்றும் ஒரே நிறமுடையவன்

நாம் இவுலகை காணும் முன்பிலிருந்தே
நமுடைய
வெற்றி தோல்வி
இன்பம் துன்பம்
வருமையே என்றாலும்
இறுதிவரை நமுடனிருந்து
மண்ணோடு மண்ணாகும்
இறுதி உடலனுவரையில்
நமுடலுடன் பயனம் செய்வான்

உயிர் தோழனும் உயிர் பிரிந்ததும்
மறைந்து விடுவான்
ஆனால் இவனோ நம்
உடல் தோழனாவான்

ஆவன் தான் "நிழல்"-எனும் உடல் தோழன்

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (9-Sep-13, 3:05 pm)
பார்வை : 100

மேலே