பாலைவன அணிவகுப்பு
பளிச்சென காட்சி கண்ணில் பட்டது
பாலைவன அணிவகுப்பு கவியானது !
ஒட்டகங்கள் பத்து பவிசாய் செல்கிறது
ஒற்றுமையே நாங்கள் என்றும் சொல்கிறது !
தங்கநிற மண்ணில் சிங்க நடைபோடுது
தளராத மனதுடன் தலையை தூக்குது !
மனிதன் வாழா பாலையே சோலை அதற்கு
மனிதம் இல்லா சோலையும் பாலையே !
அழகுமிகு மண்மேடு செதுக்கிய சிலையாய்
அழகுநடை ஒட்டகங்கள் அங்கே பெட்டகங்கள் !
ரசிக்கும் தன்மை இருந்திட்டால் எவருக்கும்
ரசித்து மகிழலாம் எதனையும் கண்டால் !
படத்திற்காக பாட்டெழுத நினைத்திட்டேன்
படத்தோடு ஒன்றியதால் முடித்திட்டேன் !
பழனி குமார்