எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
மழை வராது
என நம்பும்
கையில்
குடையில்லா நாட்களில்
தொப்பலாய் நனைந்து
வீடு திரும்புகின்றேன்
நிறுத்தங்களில்
காத்திருக்கையில்
எல்லா ஊர்களுக்கும் போக
பேரூந்து வந்தாலும்
எனக்கானது
எப்போதும் தாமதித்தே
வருகின்றது.
பத்திரிகைகளில்
தேவை பக்கங்களில்
எனக்கானதுகளை
தேடும் வேளைகளில்
தேவை இல்லாததுகளே
கண்களைச் சீண்டுகின்றது.
அதிகாலை
முற்றத்து மாமரத்தில்
வந்து காகம் கரையும்
நாட்களில் விருந்தினர்
வரலாம் என
எதிர்பார்த்து எவரும்
வரக் கண்டதில்லை
என்றாவது
வீட்டுக்கு வர நேர்ந்தால்
நன்கு உபசரிக்க வேண்டும்
என எண்ணிக் கொண்டிருப்பவர்
மாதக் கடைசியில் வர
தவித்துப்போகிறேன்
எப்போதாவது
காதலியோடு
சினிமாவுக்குப்
போகும்போது
சீட்டுக் கிடைக்காமல்
திரும்பிப் போகிறேன்
வேலை வாய்ப்புக்காக
அனுப்பும்
விண்ணப்பங்களுக்கு
கால தாமதமாகியே
நேர்முக பரீட்ச்சைக்கு
அழைப்புகள் வருகின்றன
இப்படித்தான் கழிகின்றன
en சின்னச் சின்னச்
எதிர்பார்ப்புகளும்
ஏமாற்றங்களாய்.